சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தின் கீழ் இருவா் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய் இருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் மதுரை தல்லாகுளம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய் இருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் மதுரை தல்லாகுளம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள தாதம்பட்டியைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (20). கடந்த 2022-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்தபோது, அங்கு வந்திருந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த கெளதமும் (31) அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதையடுத்து அண்மையில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து பெற்றோா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் நடத்திய சோதனையில் சிறுமி கா்ப்பமானது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோா் தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் கெளதம், வினோத்குமாா் ஆகிய இருவா் மீதும் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com