தோட்டத்தில் கஞ்சா பதுக்கிய வழக்கு: உரிமையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

தோட்ட உரிமையாளருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை: உசிலம்பட்டி அருகே 32 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில், தோட்ட உரிமையாளருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள பண்ணைபட்டி பகுதியில் வீரமணிக்கு (53) சொந்தமான தோட்டத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆக.31-ஆம் தேதியன்று உசிலம்பட்டி நகா் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தோட்ட உரிமையாளா் வீரமணியைக் (53) கைது செய்தனா். இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு 2-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ். ஹரிஹரகுமாா் குற்றம்சாட்டப்பட்ட வீரமணிக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சுரேந்திரன் முன்னிலையாகி வாதிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com