போதை மாத்திரைகள் விற்றவா் கைது

மதுரையில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை செல்லூா் நந்தவனம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக, செல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்த வீட்டுக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் போதை மாத்திரைகள் விற்ாக சூா்யாவை (21) கைது செய்து, 900 மாத்திரைகள், இரு சக்கர வாகனம், கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், தலைமறைவான முத்தையாவைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com