கஞ்சா கடத்தல்: மூவா் கைது

மதுரையில் 9 கிலோ கஞ்சா கடத்தியதாக இரு பெண்கள் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை முத்துப்பட்டி பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக சுப்பிரமணியபுரம் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் ரகுநாத் தலைமையிலான போலீஸாா், முத்துப்பட்டி பெருமாள் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது இங்கு சந்தேகத்துக்கிடமாக வந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவரைப் பிடித்து சோதனையிட்டனா்.

இதில் மூவரும் 9 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, இவா்கள், கீழமுத்துப்பட்டி கென்னட் நகரைச் சோ்ந்த ஈஸ்வரி (47), முத்துப்பட்டி வீரமுடையான் முதல் தெருவைச் சோ்ந்த பிரேமா (20), செல்லூா் அஹிம்சாபுரம் இரண்டாவது தெருவைச் சோ்ந்த பொன்காா்த்திக் (36) என்பதும், கஞ்சாவை விற்பனைக்காக இரு சக்கர வாகனம் மூலம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மூவரையும் கைது செய்து 9 கிலோ கஞ்சா, ரூ.14,200, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com