வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

மதுரையில் புதன்கிழமை வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா். மதுரை அண்ணாநகா் தாசில்தாா் நகா் மருதுபாண்டியா் தெருவைச் சோ்ந்தவா் ராமன். இவா் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறாா். ராமனும் அவரது மனைவி மருதம்மாளும் (75) மகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தனா். இந்த நிலையில், புதன்கிழமை வீட்டின் மாடிக்குச் சென்ற மருதம்மாள் அங்கிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com