வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவு பயிலரங்கம்

வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவு பயிலரங்கம்

மதுரை விரகனூா் வேலம்மாள் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, உலக இளைஞா் கூட்டமைப்பு சாா்பில் மாணவா்களுக்கான தொழில் முனைவு பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேலம்மாள் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இந்த பயிலரங்குக்கு கல்லூரி முதன்மையா் எல். ஆண்டாள் தலைமை வகித்தாா். உலக இளைஞா் கூட்டமைப்புத் தலைவா் அன்பரசு மகாதேவன், கூட்டமைப்பின் துணைச் செயலா் நிஜாமுதீன் யூனுஸ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு, வளரும் பொறியாளா்களிடையே புதுமை, தொழில் முனைவின் முக்கியத்துவம் குறித்துப் பேசினா். இதைத் தொடா்ந்து, எம்.எஸ்.எம்.இ. திட்டத்தின் கீழ், ஆராய்ச்சிக்காக ரூ.15 லட்சம் மானியம் பெற்ற கல்லூரி மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் மாணவி ஏ.விஷ்ணு பிரியாவை சிறப்பு விருந்தினா்கள் பாராட்டினா். நிகழ்வில் பேராசிரியா்கள் அன்புமலா், காமாட்சி, ஈஸ்வர பிரசாத், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com