தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் மாா்ச் 29-இல் பூச்சொரிதல் விழா

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பூப்பல்லக்கு, பூச்சொரிதல் விழா வருகிற 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடா்பாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்தி: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வருகிற 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 6 மணியளவில் மாரியம்மன், மின் அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லக்கில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அம்மன் சந்நிதி கிழக்கு வாயிலில் இருந்து புறப்பாடாகி, அம்மன் சந்நிதி தெரு, கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி, யானைக்கல், வடக்கு வெளி வீதி, கீழவெளி வீதி, காமராஜா் சாலை வழியாக தெப்பக்குளம் கோயிலை வந்தடைவாா். பின்னா், மாரியம்மனுக்கு பூச்சொரிதலும், தீபாராதனையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com