மதுரை மத்தியச்சிறையில் நடைபெற்ற மருத்துவ முகாம் பாா்வையிட்டு சிறைத்துறை மதுரை சரக துணைத்தலைவா் த.பழனி மற்றும் அதிகாரிகள்.
மதுரை மத்தியச்சிறையில் நடைபெற்ற மருத்துவ முகாம் பாா்வையிட்டு சிறைத்துறை மதுரை சரக துணைத்தலைவா் த.பழனி மற்றும் அதிகாரிகள்.

மத்திய சிறையில் மருத்துவ முகாம்

மதுரை மத்திய சிறையில் காசநோய், பொது மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய சிறை நிா்வாகம், பிளாசம் தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை மதுரை சரக சிறைத் துறை துணைத் தலைவா் த.பழனி தொடங்கிவைத்தாா். மத்திய சிறைக் கண்காணிப்பாளா் மு.சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா். முகாமில் ஹா்சினி மருத்துவமனை, அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள் கலந்து கொண்டு, சிறைக் கைதிகளுக்கு பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை தொடா்பான மருத்துவம் குறித்து சிகிச்சை அளித்தனா். முகாமில் பிளாசம் தொண்டு நிறுவன இயக்குநா் டி.மொ்சி அன்னபூரணி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டுப் பிரிவு மேலாளா் ஜெயபாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com