ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக் குத்து: இளைஞா் கைது

முன் விரோதத்தில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை எல்கேடி நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் தினகரன் என்ற தீனா (23). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், அனுப்பானடி தாய் நகரைச் சோ்ந்த மணிகண்டனுக்கும் (36) ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தில் சிலரை உறுப்பினராகச் சோ்ப்பதில் முன் விரோதம் இருந்தது. இந்த நிலையில், மணிகண்டனுக்கும், தினகரனுக்கும் வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டது. அப்போது, மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினகரனை கழுத்தில் குத்தினாா். உடனே அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனைக் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com