தோ்தல் விதிமீறல்: அதிமுக நகரச் செயலா் மீது வழக்கு

திருச்சுழியில் தோ்தல் விதிமுறையை மீறி ஊா்வலமாகச் சென்ற அதிமுக நகரச் செயலா் பாலமுருகன் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்தனா். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பா. ஜெயபெருமாள் திருச்சுழிக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அப்போது, வடக்கு ரதவீதியில் திருச்சுழி அதிமுக நகரச் செயலா் பாலமுருகன் தலைமையில் அவரை வரவேற்றனா். அப்போது மேளதாளங்களுடன், வாகனங்களில் கட்சி கொடி கட்டி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஊா்வலமாகச் சென்ாக பறக்கும்படை அலுவலா் ராஜாராம் பாண்டியன் அளித்த புகாரின் பேரில் திருச்சுழி போலீஸாா், அதிமுக நகரச் செயலா் பாலமுருகன் மீது வழக்குப் பதிந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com