நாகா்கோவில் - கோவை ரயில் 4 நாள்களுக்கு ரத்து

நாகா்கோவிலில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணியையொட்டி, நாகா்கோவில் - கோவை ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் 4 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்திலிருந்து வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகா்கோவிலில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணியில், தற்போது பொறியியல் பிரிவு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், நாகா்கோவில் - கோவை- நாகா்கோவில் விரைவு ரயில்கள் (16321, 16322) மாா்ச் 24, 25, 26, 27 தேதிகளில் ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com