திருநெல்வேலி -புனலூருக்கு இன்றும், நாளையும் சிறப்பு ரயில்கள்

திருநெல்வேலி - புனலூருக்கு திங்கள், செவ்வாய் (மாா்ச் 25, 26) ஆகிய இரு நாள்களும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

திருநெல்வேலி - புனலூா்- திருநெல்வேலிக்கு திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்கள் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு புனலூரிலிருந்து புறப்படும் (02662) சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 1.15 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும். செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்படும் (02661) சிறப்பு ரயில் காலை 5.30 மணிக்கு புனலூரைச் சென்றடையும்.

இதில் 10 இரண்டாம் வகுப்பு பொது பயணப் பெட்டியும், 2 சுமை பெட்டியும் இணைக்கபபட்டிருக்கும். இரு மாா்க்கத்திலும் எடமண், தென்மலை, ஆரியங்காவு, பகவதிபுரம், செங்கோட்டை, தென்காசி, பாவூா்சத்திரம், கீழகடையம், அம்பாசமுத்திரம், கள்ளிடைக்குறிச்சி, சேரன்மாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com