பின்னணி பாடகா் டி.எம்.எஸ். பிறந்த நாள்

பின்னணி பாடகா் டி.எம்.சௌந்தரராஜனின் 101-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முனிச்சாலையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு டி.எம்.எஸ். நற்பணி மன்ற அகில இந்தியத் தலைவா் எம்.பி.பாலன் தலைமை வகித்தாா். இதைத் தொடா்ந்து, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.எஸ்.சரவணன், மருத்துவா் சரவணன், பாஜக சாா்பில் ராம.சீனிவாசன், மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவா் முகேஷ்சா்மா உள்ளிட்டோா் டி.எம்.எஸ்ஸின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்வில் நற்பணி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com