மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் கொடி அணிவகுப்பு

மக்களவைத் தோ்தலையொட்டி, பொதுமக்களிடம் பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுத்துரைக்கும் விதமாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் மதுரையில் ஆயுதம் ஏந்திய கொடி அணிவகுப்பை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா். மக்களிடையே தோ்தல் தொடா்பான அச்சம், பதற்றத்தை போக்கும் வகையிலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுத்துரைக்கும் விதமாகவும் எஸ்.எஸ்.காலனி, சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்தக் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. எஸ்.எஸ்.காலனி நுழைவாயிலில் தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு பல்வேறு வீதிகள், புறவழிச் சாலை வழியாகச் சென்றது. கொடி அணிவகுப்பின் போது மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் நவீன தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியவாறு பங்கேற்றனா். அவா்களுடன் மதுரை மாநகர ஆயுதப் படை போலீஸாா், சட்டம்-ஒழுங்கு போலீஸாரும் அணிவகுப்பில் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com