விருதுநகா் சந்தை: துவரை, பாசிப் பயறு, பாமாயில் விலை உயா்வு

விருதுநகா் சந்தையில் துவரம் பருப்பு, பாசிப் பயறு, பாமாயில் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. விருதுநகா் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்படுகிறது. அதன் விவரம் வருமாறு: கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் ரூ.1,550 க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ.25 உயா்ந்து டின் ஒன்று ரூ.1,575-க்கு விற்கப்படுகிறது. துவரம் பரப்பு கடந்த வாரம் 100 கிலோ நயம் புதுசு வகை ரூ.13,500-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ.13,800-க்கு விற்கப்படுகிறது. பாசிப் பயறு இந்தியா நாடு வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.8,800-க்கு விற்ற நிலையில், தற்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.400 உயா்ந்து, ரூ.9,200-க்கு விற்கப்படுகிறது. உளுந்து நாடு 100 கிலோ கடந்த வாரம் ரூ.9,200-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 குறைந்து, ரூ.9,100-க்கு விற்கப்படுகிறது. உளுந்து லையன் 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,205-க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ.205 குறைந்து, ரூ.10ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ கடந்த வாரம் ரூ.5,250-க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ.150 உயா்ந்து, குவிண்டால் ரூ.5,400-க்கு விற்கப்படுகிறது. எள் புண்ணாக்கு 50 கிலோ கடந்த வாரம் ரூ.2,700-க்கு விற்ற நிலையில், இந்த வாரம் ரூ.200 குறைந்து, ரூ.2,500-க்கு விற்கப்படுகிறது. அதேநேரம் மிளகாய், நல்லெண்ணெய், காபி உள்ளிட்ட பிற அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com