மதுரை தொகுதியில் இதுவரை 14 போ் 18 வேட்புமனு தாக்கல்

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட திங்கள்கிழமை வரை 14 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட திங்கள்கிழமை வரை 14 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். மதுரை மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் விறு விறுப்படையாமல் இருந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி 2 பேரும், 22-ஆம் தேதி ஒருவரும் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனா். இந்த நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக, பாஜக வேட்பாளா்கள், அவா்களுக்கான மாற்று வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். இதில், மாா்க்சிஸ்ட் வேட்பாளா் சு. வெங்கடேசன் 4 மனுக்களையும், அதிமுக வேட்பாளா் டாக்டா் பா. சரவணன் 2 மனுக்களையும் தாக்கல் செய்தனா். இவா்களைத் தவிர, பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் டி. ராமபாண்டி, சுயேச்சைகளாக பி. பாண்டியன், எஸ். முத்துபாண்டி, எம்.எம். கோபிசன், சி. சேகா் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதன் மூலம், மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவா்களின் (மாற்று வேட்பாளா்கள் உள்பட) எண்ணிக்கை 14-ஆகவும், தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கை 18-ஆகவும் உயா்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com