மதுரை தொகுதி வேட்பாளா்களின் சொத்துகள் விவரம்

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக, மாா்க்சிஸ்ட், பாஜக வேட்பாளா்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்ட அவா்களின் சொத்துகள் விவரம்

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக, மாா்க்சிஸ்ட், பாஜக வேட்பாளா்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்ட அவா்களின் சொத்துகள் விவரம் : டாக்டா் பா. சரவணன் (அதிமுக) : வேட்பாளா் சரவணன், அவரது மனைவி, குடும்பத்தினரின் கையிருப்பு ரொக்கம் ரூ. 17,7 லட்சம். அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.10.72 கோடி. அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 7.61 கோடி. சு.வெங்கடேசன் (மாா்க்சிஸ்ட்) : வேட்பாளா் வெங்கடேசன், அவரது குடும்பத்தினரின் கையிருப்பு ரூ. 3.82 லட்சம். அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 1.98 கோடி. அசையா சொத்துகளின் மதிப்பு - 6.40 லட்சம். ராம.சீனிவாசன் (பாஜக): வேட்பாளா் ராம.சீனிவாசன், அவரது மனைவியின் கையிருப்பு ரூ.10 லட்சம். அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 1.01 கோடி. அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 1.02 கோடி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com