மாணவா்களிடையே போதைப் பொருள்கள் புழக்கம்: கட்டுப்படுத்தக் கோரிக்கை

மாணவா்களிடையே போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என அகில இந்திய மாணவா் கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மதுரை: மாணவா்களிடையே போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என அகில இந்திய மாணவா் கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கழகத்தின் மதுரை மாவட்ட அமைப்பாளா் ஆா்.தேவராஜ், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பிய மனு விவரம் : மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களிடையே சில குறிப்பிடத்தக்க போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், மாணவா்களுக்கு பள்ளி அளவில் ஆற்றுப்படுத்தும் நிகழ்வு நடத்தப்பட வேண்டும். பள்ளிகளுக்கு வெளியே உள்ள பெட்டிக் கடைகளில் போதைப் பொருள் விற்பனை செய்வதை காவல் துறை மூலம் தடுக்க வேண்டும். போதைப் பழக்கங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகளில் பள்ளி மேலாண்மைக் குழுவை ஈடுபடுத்த வேண்டும். பள்ளி அருகே செயல்படும் மதுக் கடைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com