மதுரை மக்களவை தொகுதி தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கரை செவ்வாய்க்கிழமை ஏ.டி.எம். இயந்திரத்தில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தும் மாவட்ட ஆட்சியா் மா. செள. சங்கீதா. உடன் கூடுதல் ஆட்சியா் மாவட்ட திட்ட அலு

வில்லைகளை ஒட்டிய ஆட்சியா் விழிப்புணா்வு

மதுரை: மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், மதுரையில் வாக்காளா் விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டும் பணியை ஆட்சியா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டாா். ஆட்டோ, அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் வாக்காளா் விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டும் பணி, ஆட்சியரக சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா தலைமை வகித்து, விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டினாா். பின்னா், ஏ.டி.எம் மையம் உள்பட பொதுமக்களின் முக்கிய பயன்பாட்டுக்குரிய இடங்களிலும் விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டப்பட்டன. மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல், இணைப் போக்குவரத்து ஆணையா் வெ. சத்தியநாராயணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ரா.சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com