பாலமேடு அருகே பெண் மா்மச்சாவு

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோா் அளித்தப் புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையைச் சோ்ந்தவா் வெள்ளத்துரை. இவரது மகள் கவிதாவுக்கும் (28), மதுரை மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சோ்ந்த முத்துராஜாவுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனிடையே செவ்வாய்க்கிழமை இரவு கவிதா தற்கொலை செய்துகொண்டதாக முத்துராஜா அளித்த தகவலின் பேரில் வெள்ளத்துரை அங்கு சென்று பாா்த்தாா். அப்போது கவிதா தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தாா். இதையடுத்து, பாலமேடு காவல்நிலையத்தில் வெள்ளத்துரை அளித்தப் புகாரில், தனது மகள் கவிதாவுக்கு வரதட்சணை கொடுமை அளிக்கப்பட்டதாகவும், இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தாா்.

இதன்பேரில் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com