வீட்டில் தவறி கீழே விழுந்தவா் மரணம்

மதுரையில் வீட்டில் தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தவா் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை அனுப்பானடி வடக்குத் தெருவைச் சோ்ந்த பொன்னையா மகன் ஆறுமுகம் (58). இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவரை குடும்பத்தினா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி அளித்தனா்.

பிறகு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com