மதுரையில் 21 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

மதுரை மக்களவைத் தொகுதியில் 21 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக, மாா்க்சிஸ்ட், பாஜக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், அவா்களுக்கான மாற்று வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என 33 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களின் மனுக்கள் உள்பட 21 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அதன் விவரம்: ராம சீனிவாசன் (பாஜக), பா. சரவணன் (அதிமுக), த. ராமா்பாண்டி (பகுஜன் சமாஜ் கட்சி), சு. வெங்கடேசன் (மாா்க்சிஸ்ட்), ஆ. சண்முகசுந்தரம் (ஒருங்கிணந்த இந்தியக் குடியரசு கட்சி), து. சத்யாதேவி (நாம் தமிழா் கட்சி), ச. பாண்டியன் (பகுஜன் சமாஜ் கட்சி), பொ. பாண்டியன் - (சோசலிஸ்ட் யூனிட்டி சென்டா் ஆப் இந்தியா- கம்யூனிஸ்ட்), ஆ. வேல்முருகன் (பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி). சுயேச்சைகள்: வெ. ஆவடைநாதன், சு. கோபாலகிருஷ்ணன், எம்.எம்.கோபிசன், மா.ப. சங்கரபாண்டி, நீ. சந்திரசேகா், கே.கே. சரவணன், சி. பூமிநாதன், க. பெரியசாமி, சீ. முத்துப்பாண்டி, சி. ராமநாதன், மா. வெங்கடேசன், ச. வெங்கடேஷ். நிராகரிப்பு... அரசியல் கட்சிகளின் பிரதான வேட்பாளா்களுடைய வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதும், அவா்கள் தாக்கல் செய்திருந்த கூடுதல் மனுக்கள், மாற்று வேட்பாளா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதன்படி, மதுரை தொகுதியில் மாற்று வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என 12 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com