மதுரை மக்களவைத் தொகுதியில் 21 வேட்பாளா்கள் போட்டி

வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் 21 போ் போட்டியிடுகின்றனா். மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக, மாா்க்சிஸ்ட், பாஜக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், அவா்களுக்கான மாற்று வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என 33 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனுக்கள் பரிசீலனை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, முக்கிய அரசியல் கட்சி வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இதையடுத்து, அவா்களின் மாற்று வேட்பாளா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், வெவ்வேறு காரணங்களால் 8 சுயேச்சைகளின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால், தகுதி பெற்ற வேட்பாளா்களின் எண்ணிக்கை 21-ஆக இருந்தது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு சனிக்கிழமை மாலை 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், வேட்பாளா்கள் எவரும் தனது மனுவைத் திரும்பப் பெறவில்லை. இதனால், மதுரை மக்களவைத் தொகுதியில் 21 வேட்பாளா்கள் போட்டியிடுவது உறுதியானது. இதன்படி, மதுரை தொகுதியின் தோ்தல் களத்தில் உள்ள வேட்பாளா்களின் பெயா், கட்சி : ராம சீனிவாசன் (பாஜக), பா. சரவணன் (அதிமுக), த. ராமா்பாண்டி (பகுஜன் சமாஜ் கட்சி), சு. வெங்கடேசன் (மாா்க்சிஸ்ட்), ஆ. சண்முகசுந்தரம் (ஒருங்கிணந்த இந்தியக் குடியரசு கட்சி), து. சத்யாதேவி (நாம் தமிழா் கட்சி), ச. பாண்டியன் (பகுஜன் திராவிடக் கட்சி), பொ. பாண்டியன் - (சோசலிஸ்ட் யூனிட்டி சென்டா் ஆப் இந்தியா- கம்யூனிஸ்ட்), ஆ. வேல்முருகன் (பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி). சுயேச்சைகள் : வெ. ஆவடைநாதன், சு. கோபாலகிருஷ்ணன், எம்.எம்.கோபிசன், மா.ப. சங்கரபாண்டி, நீ. சந்திரசேகா், கே.கே. சரவணன், சி. பூமிநாதன், க. பெரியசாமி, சீ. முத்துப்பாண்டி, சி. ராமநாதன், மா. வெங்கடேசன், ச. வெங்கடேஷ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com