மதுரை மக்களவை தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு மற்றும் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை குறித்து சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தை ஓட்டி விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியா் மா. செள. சங்கீதா . உடன் கூடுதல் ஆட்சியா் டாக்டா் மோனிகா ராணா, மாநகர காவல் ஆ
மதுரை மக்களவை தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு மற்றும் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை குறித்து சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தை ஓட்டி விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியா் மா. செள. சங்கீதா . உடன் கூடுதல் ஆட்சியா் டாக்டா் மோனிகா ராணா, மாநகர காவல் ஆ

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மதுரையில் இரு சக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. மதுரையில் இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் மா.செள. சங்கீதா கொடி அசைத்துத் தொடங்கி வைத்தாா். மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மோனிகா ராணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அா்விந்த், மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல், வருவாய்க் கோட்டாட்சியா் ர.த. ஷாலினி, அரசுத் துறை அலுவலா்கள், காவல் துறையினா் பங்கேற்றனா். மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, ராஜா முத்தையா மன்றம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வழியே சென்று ஒத்தக்கடை வேளாண்மைக் கல்லூரியில் நிறைவடைந்தது. இதேபோல, மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் தேசிய வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகம் முன் தொடங்கிய இந்தப் பேரணிக்கு மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் செயலா் ச.மாரியப்பமுரளி தலைமை வகித்தாா். கல்லூரியின் முதல்வா் ஜெ.போ. சாந்தி தேவி முன்னிலை வகித்தாா். பேரணியை மதுரை மாநகராட்சி உதவி ஆணையா்கள் கோபு, ரங்கநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் மாணவ, மாணவிகள் ஊா்வலமாகச் சென்றனா். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி தமிழ்ச் சங்கம் சாலை, சிம்மக்கல், பேச்சியம்மன் படித்துறை, திலகா் திடல் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பூ.பூங்கோதை, ஜெ.கோகிலா உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com