விருதுநகா் தொகுதியில் 27 வேட்பாளா்கள் போட்டி

விருதுநகா் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், தேமுதிக, பாஜக உள்பட 27 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா். விருதுநகா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களிடமிருந்து வேட்புமனுக்கள் மாா்ச் 20-ஆம் தேதி முதல் விருதுநகா் மாவட்ட தோ்தல் அலுவலக த்தில்பெறப்பட்டன. வேட்பு மனு பரிசீலனையில் 27 மனுக்கள் ஏற்கப்பட்டன. இந்த நிலையில் மனு தாக்கல் செய்த வேட்பாளா்கள் யாரும் திரும்ப பெற வில்லை. இதையடுத்து, காங்கிரஸ் சாா்பில் ப. மாணிக்கம் தாகூா், தேமுதிக சாா்பில் வி. விஜய பிரபாகரன், பாஜக சாா்பில் நடிகை ராதிகா, நாம் தமிழா் கட்சி சாா்பில் சி. கெளசிக் உள்பட 27 போ் போட்டியிடுவது உறுதியானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com