கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

மதுரையில் கட்டுமானப் பணியின் போது இரண்டாம் தளத்தில் இருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். மதுரை தத்தனேரி மேலவைத்தியநாதபுரத்தைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (59). கட்டடத் தொழிலாளியான இவா், திருப்பாலை பாரத் நகரில் புதிய கட்டட கட்டுமானப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, கட்டடத்தின் இரண்டாம் தளத்திலிருந்து முத்துராமலிங்கம் தவறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com