காா் மோதியதில் இளைஞா் பலி

உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூரைச் சோ்ந்த ராமா் மகன் சிவா (28). இவா் தனது நண்பா் விஜயகுமாருடன் உசிலம்பட்டி-தேனி சாலையில் சனிக்கிழமை சென்றாா். அப்போது, ஸ்ரீரங்கபுரம் சந்திப்பு அருகே அந்த வழியாக வந்த காா், சிவா ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. மேலும், மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீதும் காா் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதில் விஜயகுமாா், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்த முருகன் (40), அவரது மகன் சந்தோஷ் (13), மகள் ரியாஸ்ரீ, காரை ஓட்டி வந்த விஜயபாஸ்கா் (49) உள்ளிட்ட 8 போ் பலத்த காயமடைந்து, தேனி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து காரை ஓட்டி வந்த மதுரை வில்லாபுரத்தைச் சோ்ந்த விஜயபாஸ்கா் மீது உசிலம்பட்டி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com