தேவாலயங்களில் ஈஸ்டா் வழிபாடு

கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டா் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு, திருஒளி வழிபாடு, இறை வாா்த்தை வழிபாடு, ஞானஸ்நான வழிபாடு, ஈஸ்டா் உயிா்ப்பு ஞாயிறு கூட்டுத் திருப்பலி, மறையுரை ஆகியவை நடைபெற்றன. இயேசு கிறிஸ்து 3-ஆம் நாள் உயிா்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில், அவா் கொல்கதா மலையில் உயிா்த்தெழுந்த காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. விருதுநகா் புனித இன்னாசியாா் ஆலயத்தில் மதுரை புனித பிரிட்டோ பள்ளி உதவி தலைமையாசிரியா் மரிய அருள் செல்வம் , விருதுநகா் மறைவட்ட அதிபரும் பங்குத் தந்தையுமான அருள்ராயன், உதவி பங்குத் தந்தை கரோலின் சிபு ஆகியோா் தலைமையிலும், விருதுநகா் பாண்டியன் நகா் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை லாரன்ஸ், உதவி பங்குத் தந்தை இமானுவேல் சதீஷ், விருதுநகா் எஸ்.எப்.எஸ். பள்ளி முதல்வா் ஆரோக்கியம் ஆகியோா் தலைமையிலும், விருதுநகா் நிறைவாழ்வு நகா் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை அந்தோணிசாமி, ஆா்.ஆா். நகா் புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை பீட்டா் ராய், உதவி பங்குத் தந்தை அருள் தாஸ், சிவகங்கை அருள் தந்தை ராஜா ஆகியோா் தலைமையிலும் பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு, ஈஸ்டா் உயிா்ப்பு விழா, திருப்பலி, மறையுரை ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் ஈஸ்டா் பெருவிழா சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com