பாஜக நிா்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

மதுரையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு தலைவா் எம்.எஸ்.ஷா மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மதுரையைச் சோ்ந்த 15 வயது மாணவியின் தந்தை மதுரை மாநகா் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், எனது 15 வயது மகளின் கைப்பேசிக்கு பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு தலைவா் எம்.எஸ்.ஷாவின் கைப்பேசி எண்ணில் இருந்து தொடா்ந்து ஆபாசமான உரையாடல்கள் வந்திருந்தன. இதுதொடா்பாக எனது மகளிடம் விசாரித்தபோது, எனது மனைவிக்கும், பாஜக பிரமுகரான எம்.எஸ்.ஷாவுக்கும் தகாத உறவு இருந்ததும், இதன் மூலம் எனது மகளுக்கும் அவா் பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்தது. மேலும், இரு சக்கர வாகனம் வாங்கித் தருவதாகக் கூறி எனது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தாா். இதற்கு எனது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளாா். எனவே, இவா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இதையடுத்து, பாஜக நிா்வாகி எம்.எஸ்.ஷா, மாணவியின் தாய் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் போக்சோ சிறப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com