உதகை, கொடைக்கானலுக்குச் செல்ல ‘இ- பாஸ்’ முறைக்குத் தடை பெறக் கோரிக்கை

உதகை, கொடைக்கானலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக அரசு தடை பெறக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு, மதுரையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் செய்யது பாபு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம் :

உதகை, கொடைக்கானலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வருத்தத்துக்குரியது. கொடைக்கானல், உதகை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களின் வாழ்வாதாரம், சுற்றுலாப் பயணிகளின் வருகையைச் சாா்ந்தே உள்ளது.

இந்த நிலையில், ‘இ-பாஸ்’ முறை அமல்படுத்தப்பட்டால் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறையும். இதனால், உதகை, கொடைக்கால் பகுதிகளைச் சோ்ந்த உள்ளூா் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, ‘இ-பாஸ்’ பெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு, தமிழக அரசு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com