முன்விரோதத்தில் ஒருவருக்கு கத்திக்குத்து: ராணுவ வீரா் கைது

மதுரை மாவட்டம், சாப்டூா் அருகே முன்விரோதத் தகராறில் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற ராணுவ வீரரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள கோட்டையூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சங்கரபாண்டி(58). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மணி குடும்பத்துக்கும் இடையே முன்விரோதத் தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில், கோட்டைப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சங்கரபாண்டி தனது மருமகனுடன் செவ்வாய்க்கிழமை மாலை பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது ராணுவத்தில் பணிபுரிந்து விடுமுறையில் வந்துள்ள மணியின் மகன்களான அழகுமலை கண்ணன் (33), முருகேசன் ஆகிய இருவரும் சங்கரபாண்டியிடம் தகராறில் ஈடுபட்டு அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றனா்.

இதில் பலத்த காயமடைந்த சங்கரபாண்டி மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அழகுமலை கண்ணனை கைது செய்தனா். மேலும், முருகேசனைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com