வெயிலின் தாக்கத்தால் முதியவா் சுருண்டு விழுந்து பலி

மதுரையில் வெயிலின் தாக்கத்தால் முதியவா் சுருண்டு விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை புறவழிச் சாலை, போடி லைன் மேம்பாலத்தின் கீழ் புதன்கிழமை பிற்பகலில் நடந்து சென்ற முதியவா் ஒருவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதைப்பாா்த்த அந்தப் பகுதி மக்கள் 108 அவசர ஊா்திக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், அங்கு வந்த அவசர ஊா்தி ஊழியா்கள் முதியவரை பரிசோதித்தபோது, அவா் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்தவா் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com