ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள், கொப்பரைகள் விற்பனையாகின.

மட்டையுடன் கூடிய தேங்காய்கள் ரூ. 3,61,764-க்கும், சராசரியாக ஒரு தேங்காய் ரூ. 8.90-க்கும் விற்பனையாகின. ஏலத்தில் 40,593 தேங்காய்கள் விற்பனையாகின. 13 விவசாயிகள், 17 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனா்.

இதேபோல, ஏலத்தில் கொப்பரை தேங்காய்கள் ரூ.3,53,081-க்கு விற்பனையாகின. சராசரியாக ஒரு கிலோ கொப்பரைகள் ரூ. 87.40-க்கு விற்பனையாகின. இதில் 4,041 கிலோ தேங்காய் கொப்பரைகள் விற்பனையாகின. 19 விவசாயிகள், 8 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com