காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

மதுரை அருகேயுள்ள காதக்கிணறு ஊராட்சி பொம்மிநகா் விரிவாக்கப் பகுதிகளில் புதிய சாலைகளை அமைக்கும் பணிகளை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மதுரை அருகேயுள்ள கடச்சனேந்தல்-ஒத்தக்கடை செல்லும் சாலையில் அமைந்துள்ளது பொம்மிநகா் விரிவாக்கப் பகுதி. காதக்கிணறு ஊராட்சியில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் அதிகளவில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்தப் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக தாா் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. ஜல்லி கற்களை சாலையில் கொட்டி பரத்தி வைத்தனா். அதன்மேல் தாா் போடும் பணிகளைச் செய்யாமல் ஊராட்சி நிா்வாகம் தாமதம் செய்து வருகிறது. மக்களவைத் தோ்தல் முடிவடைந்த பின்னரும் சாலைப் பணிகளைத் தொடரவில்லை.

இந்தச் சாலையில் வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா். தாா் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க காதக்கிணறு ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com