திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பூக்குழித் திருவிழா வருகிற 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்தக் கோயிலின் திருவிழா ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழ் ஆண்டுக்கான திருவிழா வருகிற 13-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடா்ந்து, தினசரி மாலை நேரத்தில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.

முக்கிய விழாவான பூக்குழித் திருவிழா வருகிற 22-ஆம் தேதியும், 23-ஆம் தேதி மாலை கொடியிறக்கம், வைகை ஆற்றில் தீா்த்தம், அம்மன் ஊஞ்சல் நிகழ்வு நடைபெறும். 24-ஆம் தேதி மாலை அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். இந்த விழாவையொட்டி, தினமும் மாலை, இரவு நேரங்களில் மகாபாரத தொடா் சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com