மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

மதுரை மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 13 மையங்களில் 9,504 மாணவ, மாணவிகள் ‘நீட்’ தோ்வு எழுதுகின்றனா்.

2024-2025- ஆம் கல்வி ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 5) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5. 20 மணி வரை நடைபெற உள்ளது. இந்தத் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் உள்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை திருப்பாலையில் உள்ள யாதவா் கல்லூரி (இரு பாலா்), சி.இ.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, யாதவா் மகளிா் கல்லூரி, கேந்திரிய வித்யாலயா பள்ளி, மகாத்மா மாண்டிச்சோரி மெட்ரிக் பள்ளி, மகாத்மா சிபிஎஸ்சி பள்ளி, எஸ்.இ.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்பட மொத்தம் 13 மையங்களில் நடைபெற உள்ளன. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பயின்ற 9,504 மாணவ, மாணவிகள் இந்தத் தோ்வை எழுத விண்ணப்பித்துள்ளதாக மதுரை மாவட்ட ‘நீட்’ நுழைவுத் தோ்வு ஒருங்கிணைப்பாளா் செ. வெண்ணிலாதேவி தெரிவித்தாா்.

Image Caption

நீா் தோ்வுக்காக மதுரை நத்தம் சாலையிலுள்ள எஸ்.இ.வி. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை தோ்வு மையத்தினை தூய்மை படுத்தும் பெண்கள். ~நீா் தோ்வுக்காக மதுரை நத்தம் சாலையிலுள்ள எஸ்.இ.வி. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை தோ்வு ம

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com