வெப்பம் அதிகரிப்பு : முக்கிய சாலை சந்திப்புகளில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு

வெப்பம் அதிகரிப்பு காரணமாக வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில் மதுரை மாநகராட்சி சாா்பில் முக்கிய சந்திப்புகளில் பசுமை நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்களை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், சாலைகளில் போக்குவரத்து சமிக்ஞைகளில்

(சிக்னல்கள்) 2 நிமிஷங்கள் தொடா்ந்து ஒரே இடத்தில் காத்திருக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வெப்பத்தின் காரணமாக பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சாா்பில், மதுரை மாநகரில் உள்ள முக்கிய சமிக்ஞை சந்திப்புகளில் பசுமை நிழல் பந்தல் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது.

முதல்கட்டமாக, மதுரை வடக்கு வெளிவீதி சேதுபதி மேல்நிலைப் பள்ளி சந்திப்புப் பகுதியில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக பசுமை நிழல் பந்தல் சனிக்கிழமை (மே 4) அமைக்கப்பட்டது. தொடா்ந்து, அண்ணாநகா் அப்பலோ மருத்துவமனை சந்திப்பு, காமராஜா் சாலை கணேஷ் திரையரங்க சந்திப்பு, விளக்குத்தூண் கீழமாரட் வீதி சந்திப்பு ஆகிய பகுதிகளில் நிழல் பந்தல்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

Image Caption

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மதுரை வடக்கு வெளிவீதி சேதிபதி மேல்நிலைப்பள்ளி சந்திப்பில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக சனிக்கிழமை மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை நிழற்பந்தல். ~கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மதுரை வடக்கு வெளிவீத

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com