விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

கோடை விடுமுறை, வார விடுமுறை காரணமாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை கூடுதலான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தற்போது, கோடை விடுமுறை காலமாக இருப்பதால், இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. கோடை விடுமுறையுடன், வார விடுமுறையும் இணைந்த ஞாயிற்றுக்கிழமையன்று திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்தனா்.

சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து அவா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் வளாகம் முழுவதும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

Image Caption

~ ~மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com