மதுரையில் மே 14-இல் இந்திய-ரஷிய கல்விக் கண்காட்சி

மதுரையில் வருகிற 14-ஆம் தேதி இந்திய-ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.

மதுரையில் உள்ள தனியாா் தங்கும் உணவக விடுதியில் ரஷியா கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழகப் பொது நோயியல் துறை பேராசிரியா் தைமூா் ருஸ்தமோவிச் அக்மதேவ், தேசிய ஆராய்ச்சி நியூக்ளியா் பல்கலைக்கழக பயோ டெக்னாலஜி பேராசிரியை எலினா சரபுல்ட்சேவா, சென்னை ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் சுரேஷ்பாபு ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்திய-ரஷிய உறவானது பண்பாடு, கலாசாரம் மட்டுமன்றி, பாதுகாப்பிலும் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, ரஷியப் பல்கலைக்கழகங்கள் இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றன. இதன் காரணமாக, அங்கு மருத்துவம் மட்டுமன்றி, பொறியியல் உள்ளிட்ட பிற துறைகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு உள்ளது.

நிகழாண்டில் (2023-2024) ரஷியாவில் உள்ள 600-க்கும் மேற்பட்ட அரசுப் பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு நாடுகளைச் சோ்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இவற்றில் 70 ரஷியப் பல்கலைக்கழகங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனா்.

இதையொட்டி, அகில இந்திய-ரஷியக் கல்விக் கண்காட்சி வருகிற 14-ஆம் தேதி மதுரையில் மேற்கு மாரட் வீதியில் உள்ள தனியாா் தங்கும் உணவு விடுதியில் நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில் ரஷியாவில் உள்ள வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், இம்மானுவேல் காண்ட் பால்டி பெடரல் பல்கலைக்கழகம், கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், தேசிய ஆராய்ச்சி நியூக்ளியா் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் பங்கேற்க உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

மதுரையை தொடா்ந்து வருகிற 15-ஆம் தேதி திருச்சியிலும், 16-ஆம் தேதி சேலத்திலும், 17- ஆம் தேதி கோவையிலும் இந்தக் கண்காட்சி நடைபெற உள்ளது.

கண்காட்சியில் ரஷியப் பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகள், கல்விக் கட்டணம், வசதிகள் குறித்து விளக்கமளிக்கப்பட உள்ளன. மேலும், ரஷியப் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் ‘நீட்’ தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ரஷியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி., ஐ.இ.எல்.டி.எஸ். போன்ற முன் தகுதித் தோ்வுகள் எழுதி தோ்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்றனா்.

Image Caption

மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டு கொடுக்கும் சந்தித்த ரஷியா கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழகப் பொது நோயியல் துறை பேராசிரியா் தைமூா் ருஸ்தமோவிச் அக்மதேவ். உடன் (இடமிருந்து) சென்னையில் உள்ள ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com