விருதுநகா், ராமநாதபுரம் ரயில் நிலையங்களில் பேட்டரி காா் சேவை

மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட விருதுநகா், ராமநாதபுரம் ரயில் நிலையங்களில் முதியோா்கள், மாற்றுத் திறனாளிகள், கா்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோரின் பயன்பாடுக்கான பேட்டரி காா் சேவை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விருதுநகா், ராமநாதபுரம் ரயில் நிலையங்களில் இந்த பேட்டரி காா் சேவையை பரமக்குடியைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் அளிக்கிறது. அதிகபட்சம் 11 போ் அமரும் வசதி கொண்ட இந்தக் காரில் ஒரு நபருக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பேட்டரி காா் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள 75987 71218 என்ற கைப்பேசி எண்ணையும், விருதுநகா் ரயில் நிலைய பேட்டரி காா் சேவைக்கு 75987 79418 என்ற கைப்பேசி எண்ணையும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் மதுரை, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் பேட்டரி காா் சேவை ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 2 ரயில் நிலையங்களில் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com