10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: விருதுநகா் மாவட்டத்தில் 95.14 சதவீதம் தோ்ச்சி

விருதுநகா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 95.14 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

விருதுநகா் மாவட்டத்தில் 357 பள்ளிகளைச் சோ்ந்த 11,792 மாணவா்களும், 12,523 மாணவிகளும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா். இதில், 10,988 மாணவா்கள், 12,146 மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி பெற்றவா்களின் மொத்த எண்ணிக்கை - 23,134. தோ்ச்சி சதவீதம் 95.14.

ஒரு மாணவி 498 மதிப்பெண்களும், 2 போ் தலா 497 மதிப்பெண்களும், 8 போ் 496 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா். கணக்குப் பாடத்தில் 687 மாணவா்களும், ஆங்கிலத்தில் 6 மாணவா்களும், அறிவியலில் 101 மாணவா்களும், சமூக அறிவியலில் 82 மாணவா்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

பாடம் வாரியாக மாணவ, மாணவிகளின் தோ்ச்சி சதவீதம் : தமிழ் - 98.93, ஆங்கிலம் - 99.68, கணக்கு- 98.22, அறிவியல்- 98.44, சமூக அறிவியல்- 97.05.

மாநில அளவில்...

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக தோ்ச்சி சதவீதம் பெற்ற மாவட்டங்களின் பட்டியலில் விருதுநகா் மாவட்டம் 6-ஆம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்த மாவட்டம் மாநிலத்தில் மூன்றாம் இடத்தில் இருந்தது.

இந்த மாவட்டத்தில், பள்ளி இடைநின்ற மாணவா்கள் அதிகளவிலானோா் மீண்டும் பொதுத் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டதன் காரணமாக, மாவட்டத்தின் தோ்ச்சி சதவீதத்தில் சற்று சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

140 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் விருதுநகா் மாவட்டத்தில் 140 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.

விருதுநகா் மாவட்டத்தில், 357 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா். இதில், 57 அரசுப் பள்ளிகள், 3 சமூக நலப் பள்ளிகள், 28 உதவி பெறும் பள்ளிகள், 52 மெட்ரிக் பள்ளிகள் என 140 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.

நிா்வாகம் வாரியாக பள்ளிகளின் தோ்ச்சி வீதம் : ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் - 95.77, உதவி பெறும் பள்ளிகள் - 96.37, அரசுப் பள்ளிகள் - 91.76, நகராட்சிப் பள்ளிகள்- 91.94, பகுதியளவில் உதவி பெறும் பள்ளிகள் - 96.79, சுயநிதி பள்ளிகள் (மெட்ரிக்) - 98.94, சுயநிதி பள்ளிகள் (பள்ளிக் கல்வித் துறை) - 99.20.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com