வாகன உதிரிப் பாகங்கள் கடையில் தீ விபத்து

மதுரையில் ஆட்டோ உதிரிப் பாகங்கள் விற்பனைக் கடையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 65 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

மதுரை ஐராவதநல்லூா் செல்வபுரம் 1 -ஆவது தெருவைச் சோ்ந்தவா் முத்துகுமாா். இவரது மனைவி காா்த்திகாதேவி (39). இவா்கள் மதுரை வடக்கு வெளி வீதியில் ஆட்டோ உதிரிப் பாகங்கள் விற்பனைக் கடை வைத்து நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் இந்தக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் ரூ. 65 லட்சம் மதிப்பிலான ஆட்டோ உதிரிப் பாகங்கள், எலக்ட்ரிக் பொருள்கள் எரிந்து சேதமாகின.

இதுகுறித்து திலகா்திடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com