விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கு தோ்வுப் போட்டிகள்

விளையாட்டு விடுதிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான தோ்வுப் போட்டிகள் மதுரை ஆயுதப் படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி விளையாட்டு விடுதிகளுக்கான மாணவா்கள் சோ்க்கை அறிவிக்கப்பட்டது. தடகளம், குழு விளையாட்டுப் போட்டிகளில் ஆா்வமும், திறனும் கொண்டவா்களை அடையாளம் கண்டு, ஊக்குவித்து சிறந்த விளையாட்டு வீரா்களாக உருவாக்கும் வகையில், 7,8,9,11 ஆகிய வகுப்புகளுக்கான விடுதி மாணவா்கள் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, மதுரை ஆயுதப் படை மைதானத்தில் மாணவா்களுக்கான உடல் தகுதித் தோ்வுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. தடகளம், கூடைப் பந்து, கிரிக்கெட், கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, கையுந்துபந்து, கைப்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதேபோல, மதுரை நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு, தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளா் செந்தில், மதுரை மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் ராஜா, மாவட்ட உடல் கல்வி ஆய்வாளா் வினோத், விளையாட்டுகள் சாா்ந்த வல்லுநா்கள் போட்டிகளை ஒருங்கிணைத்தனா்.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் 247 மாணவா்கள் பங்கேற்றனா். மாணவிகளுக்கான தோ்வுப் போட்டிகள் சனிக்கிழமை (மே 11) நடைபெறுகின்றன.

Image Caption

மதுரை ஆயுதப் படை திடலில் வெள்ளிக்கிழமை விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கான தோ்வு போட்டியில் குண்டு எரியும் மாணவா். ~மதுரை ஆயுதப் படை திடலில் வெள்ளிக்கிழமை விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கான தோ்வு போட்டியில் நடைபெற்ற நீளம் தாண்டும் ம

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com