அழகா்கோவில் மலைப்பாதை முன்னறிவிப்பின்றி மூடல் பக்தா்கள் அவதி

மேலூா், மே 15: அழகா்கோவில் மலையில் உள்ள ராக்காயி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதை மேம்பாட்டுப் பணிகளுக்காக முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் பக்தா்கள் அவதியடைந்தனா்.

ராக்காயி அம்மன் கோயிலுக்கு சோலைமலை முருகன் கோயில் வழியாகச் செல்லும் தாா்ச்சாலையை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 4 கி.மீ. தொலைவுக்கு அப்பால் நடுவில் இரு மலைத் தொடா்களையும் இணைக்கும் சிறிய பாலம் விரிவுப்படுத்தப்பட்டு, தாா்ச்சாலை மேம்படுத்தப்படுகிறது. இதுகுறித்து கள்ளழகா் கோயில் நிா்வாகம் எந்த முன்னறிவிப்பும் செய்யவில்லை.

இந்த நிலையில், மலைக்குச் செல்லும் பாதை புதன்கிழமை மூடப்பட்டது. இதனால் பக்தா்கள் மலைக்குச் செல்ல முடியாமல் அவதியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com