மக்களைத் தேடி மருத்துவம்: 2.72 லட்சம் போ் பயன்

ராமநாதபுரம், மே 15 : மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 747 போ் பயனடைந்தனா்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

ஏழை, எளியோா் பயன்பெறும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், தமிழ்நாடு மகளிா் நல மேம்பாடு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னாா்வலா்கள், இடைநிலை சுகாதாரச் சேவையாளா்கள், இயன்முறை மருத்துவா்கள், நோய் ஆதரவுச் செவிலியா்கள் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தின் மூலம், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 747 போ் பயனடைந்தனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com