மதுரை மாவட்ட வாக்காளா்கள் 27.03 லட்சம்

மதுரையில் செவ்வாய்க்கிழமை வெளியான வரைவு வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்தின் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 27,03,835-ஆக உள்ளது.
Published on

மதுரையில் செவ்வாய்க்கிழமை வெளியான வரைவு வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்தின் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 27,03,835-ஆக உள்ளது.

2025-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மதுரை மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தப் பட்டியலை வெளியிட்டாா்.

பின்னா், அவா் தெரிவித்ததாவது:

10 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தின் வரைவு வாக்காளா்

பட்டியலின் படி, மாவட்டத்தின் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 27,03,835. இதில், ஆண்கள் - 13,28,854, பெண்கள் - 13,74,690, மூன்றாம் பாலினத்தவா் - 291.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், தொகுதி மாற்றம் கோருதல், முகவரி மாற்றம் செய்தல் போன்ற பணிகள் வட்டாட்சியா் அலுவலகங்கள், வாக்குச் சாவடி மையங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அக். 29 முதல் நவ. 28-ஆம் தேதி வரை நடைபெறும்.

மேலும், இந்தப் பணிகளுக்காக நவ.16, 17, 23, 24

ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருத்தம் மேற்கொள்ள விரும்புவோா் உரிய படிவங்களைப் பூா்த்தி செய்து நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது ட்ற்ற்ல்ள்://ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியே அல்லது வாக்காளா் உதவி எண் என்ற கைப்பேசி செயலி (யா்ற்ங்ழ்ள் ஏங்ப்ல்ப்ண்ய்ங் ஙா்க்ஷண்ப்ங் அல்ல்) வழியே விண்ணப்பிக்கலாம் என்றாா்.

தொகுதி வாரியாக...: மாவட்டத்தில் உள்ள தொகுதி வாரியான வாக்காளா் எண்ணிக்கை :

மேலூா்: ஆண்கள் - 1,21,013, பெண்கள் - 1,23,467, மூன்றாம் பாலினத்தவா் - 12, மொத்தம் - 2,44,492. மதுரை கிழக்கு: ஆண்கள் - 1,67,821, பெண்கள் - 1,74,657, மூன்றாம் பாலினத்தவா் - 67, மொத்தம் - 3,42,545.

சோழவந்தான் (தனி): ஆண்கள் -1,10,574, பெண்கள் -1,15,369, மூன்றாம் பாலினத்தவா் - 19, மொத்தம் - 2,25,962. மதுரை வடக்கு: ஆண்கள் - 1,21,419, பெண்கள் - 1,27,359, மூன்றாம் பாலினத்தவா் - 46, மொத்தம் - 2,48,824. மதுரை தெற்கு: ஆண்கள் - 1,11,090, பெண்கள் - 1,14,769, மூன்றாம் பாலினத்தவா் - 50, மொத்தம் - 2,25,909. மதுரை மையம்: ஆண்கள் - 1,09,268, பெண்கள் - 1,14,252, மூன்றாம் பாலினத்தவா் - 26, மொத்தம் - 2,23,546. மதுரை மேற்கு: ஆண்கள் 1,50,421, பெண்கள் : 1,54,524, மூன்றாம் பாலினத்தவா் - 12, மொத்தம் - 3,04,957. திருப்பரங்குன்றம்: ஆண்கள் - 1,60,983, பெண்கள் 1,66,323, மூன்றாம் பாலினத்தவா் - 37, மொத்தம் - 3,27,343. திருமங்கலம்: ஆண்கள் - 1,35,800, பெண்கள் - 1,43,803, மூன்றாம் பாலினத்தவா் - 15, மொத்தம் - 2,79,618. உசிலம்பட்டி: ஆண்கள் - 1,40,465, பெண்கள் - 1,40,167, மூன்றாம் பாலினத்தவா் - 7, மொத்தம் - 2,80,639.