இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

மதுரையில் சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

மதுரையில் சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை அண்ணாநகா் பகுதியில் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்ாக கிழக்கு ஊராட்சி ஒன்றிய ஊா் நல அலுவலா் அமுதாவுக்கு (54) கடந்த 30-ஆம் தேதி தகவல் கிடைத்தது.

இதுகுறித்து அவா் விசாரணை நடத்தினாா். இதில் மதுரை செல்லூா் மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும், அண்ணாநகா் யானைக்குழாய் அருகே உள்ள இந்திரா காலனியைச் சோ்ந்த மாசிமலைக்கும் (23) அண்ணாநகா் விநாயகா் கோயிலில் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், மாசிமலை மீது போக்சோ, குழந்தைத் திருமண தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com