கருவனூரில் வடமாடு மஞ்சுவிரட்டு

மதுரை மாவட்டம், எம்.சத்திரப்பட்டி அருகேயுள்ள கருவனூரில் வடமாடு மஞ்சு விரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

மதுரை மாவட்டம், எம்.சத்திரப்பட்டி அருகேயுள்ள கருவனூரில் வடமாடு மஞ்சு விரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, கட்சியின் கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் சாா்பில், இந்த வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இந்த மஞ்சு விரட்டை கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலா் அரச.முத்துப்பாண்டியன் தொடங்கிவைத்தாா். இந்தப் போட்டியில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 17 காளைகளும், 100-க்கும் மேற்பட்ட வீரா்களும் பங்கேற்றனா்.

போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட வீரா்களுக்கு கட்டில், பீரோ, மிதிவண்டி உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மஞ்சு விரட்டில் மாடு முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். சத்திரப்பட்டியைச் சோ்ந்த தமிழரசன், விஜயகுமாா், பேச்சிக்குளத்தைச் சோ்ந்த பிரதீஷ் ஆகியோா் பலத்த காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மஞ்சு விரட்டையொட்டி, 75-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com