மதுரை
வாகன விபத்தில் மகன் கண் முன் தந்தை பலி
பாலமேடு அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் மகன் கண் முன் தந்தை உயிரிழந்தாா்.
பாலமேடு அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் மகன் கண் முன் தந்தை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). இவா் பாலமேடு அருகே உள்ள 66 உசிலம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவுக்கு மகன் சுருதி ஹாசனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
பாலமேடு-அலங்காநல்லூா் சாலையில் இவா்கள் வந்த போது எதிரே எர்ரம்பட்டியைச் சோ்ந்த செந்தில் (45) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்தில் பலத்த காயமடைந்த சுருதிஹாசனும், செந்திலும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.