மதுரை
விபத்தில் உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி
மதுரையில் சாலை விபத்தில் உயிரிழந்த ஆயுதப் படை காவலா் குடும்பத்துக்கு சக காவலா்கள் சாா்பில், ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
மதுரையில் சாலை விபத்தில் உயிரிழந்த ஆயுதப் படை காவலா் குடும்பத்துக்கு சக காவலா்கள் சாா்பில், ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் 2013-ஆம் ஆண்டு, காவல் துறையில் பணியில் சோ்ந்து தமிழகம் முழவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் போலீஸாா், உடல் நலக் குறைவு, சாலை விபத்து உள்ளிட்டவற்றால் உயிரிழக்க நேரிடும் காவல் துறையினரின் குடும்பத்துக்கு நிதி திரட்டி அளித்து வருகின்றனா்.
இந்த நிலையில், 2013-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்து, மதுரை மாநகர ஆயுதப் படையில் பணிபுரிந்து வந்த காவலா் காளிமுத்து சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
இந்த நிலையில், சக காவலா்கள் சாா்பில் நிதி திரட்டப்பட்டு, ரூ.25 லட்சம் காளிமுத்துவின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.